எனக்காய்

தவம் என்று சொல்வதற்கில்லை
தரணியெங்கும் அலைந்ததில்லை
தடம்மாறி கிடைத்ததுமில்லை
தகராறு இதிலில்லை

உன்னை நான் பார்த்ததில்லை
உன்னுருவம் என்னுள்ளே
ஊகிக்கக முடியா சந்தோசம்
உணர்த்திசெல்ல வார்த்தையில்லை

வார்த்தையொன்று கேட்க
வருடமொன்று கடந்தும்
வருகைக்காய் வழிமேல்
வாசனை மலராய் பூத்தும்

தொட்டுவிடும் தூரமே
தொடர்புக்கு காரணம்
தொலைந்துவிடும் வார்த்தைக்காய்
தொலைத்தோம் நாட்களை

கடல்கடந்தும் காவியமாய்
காலம் முழுதும் கற்பனையில்
காதலென்று கருணை கொலைசெய்ய
கண்ணிற்கு விருப்பமில்லை

ஆர்வமிங்கு அணைபோட
ஆத்திரம் தான் ஆர்ப்பரிக்க
ஆகாய தாமரையாய்
ஆனந்தமிங்கே அடங்கித்தான் போனது ...

மாதமிரண்டு மரணிக்க
மனக்கணக்கு மகுடம் சூடுது
மணவிழாவோ மவுனமாய் காய்னகர்த்துது
மன்மதன் வருகைக்காய்

இதயக்குயிலின் ஓசையோ
இனம்புரியா இசையாகிறது
இசைக்கும் கருவியாய்
இச்சைகளை அறுத்து இதமாய் காதிற்கு

எதார்த்த நடையில் தொடர்ந்துவர
ஏகாந்தமிங்கே எக்காளமாக
ஏக்கத்தின் நோக்கம் எதிர்பார்ப்பாய்
என்றுமே என்னருகில் எனக்காய் ...!!!

எழுதியவர் : பானு கே எல் (17-Mar-14, 9:45 am)
Tanglish : enakkaai
பார்வை : 89

மேலே