இலக்கற்ற பயணி
இலக்கற்ற பயணியை
இல்லம் துறந்து
இதயம் கனத்து
பயணிக்கிறேன்
பாதையும் இல்லை..
பார்வையும் இல்லை..
பணம் தின்னும்
பருந்துகளுக்கு
பசியென்றால்
பச்சை குழந்தையையும்
படையலிடும்
பகுத்தறிவில்லா சமூகத்தை
பார்வையற்று பார்ப்பதே
பயமாயிருக்கிறது....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
