உவமைதான் அழகு

கறை படிந்த உளமுடையான்!
கடவுள் இடம் பணிந்தவுடன்!
உடன் மலர்ந்த
மலரைப் போல!
மனங்கள் பல கவர்ந்திடுவான்!!

சீற்றமிகு உளமுடையான்!
சாந்தமிகு இறையில்லம் உள்ளே!
விண்ணிலே எடையே கூடி!
மழைத் துளியாய் விழுவது போல!
சில்லென்றே குளிர்ந்திடுவான்!!

தூய உளம் படைத்தோன்! - ஏழை படும்
துயர் கண்டு
தகிக்கும் கொடும் வெயிலினிலே!
அகப்பட்ட புழு போல!
மனம் புழுங்கியே போவான்!!

கடல் கடந்து சென்றவனை!
கண்முன்னே வரக் கண்டு!
இரவுத் திங்கள் முகம் பார்த்து!
இதமாய் மலர்ந்த மல்லிகை போல!
மங்கையவள் மகிழ்கின்றாள்!!

காரிருள் உளமுடையான்!
மறை ஓதும் ஓசை கேட்டு!
மனமுருகியே - தினம்!
இறை துதி பாடிய பக்தனைப் போல!
மன நிறைவு பெற்றிடுவான்!!

கற்றறிந்தோன் உரை மறுத்து!
கரம் பிடித்தவள் புறம் தள்ளி!
சுயநலமாய் வாழ்வோன் வாழ்க்கை!
செவி கேளான் சங்கு போல!
வீண் செயலாய் தான் போகும்!!

பஞ்சமா பாதகம் செய்வான்!
பண்பிலே குறையுடையான்!
பெற்ற தன் குழந்தைக்காக!
நதியோடும் நீரைப் போல!
தூய மனம் பெற்றிடுவான்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (17-Mar-14, 9:59 pm)
பார்வை : 45

மேலே