ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நாளும்..
ஒவ்வொரு மாதிரி...

ஒருநாள் தகரம்
ஒருநாள் தங்கம்
ஒருநாள் வைரம்
ஒருநாள் வெறும் கல்

எல்லா நாளும்
ஒன்றாய் இருந்தால்
எல்லார் வாழ்வும்
சலித்தே போகும்...

திருப்பம் என்பது
தினமும் வேண்டும்
எதிர்பாராததை எதிர்
கொள்ள வேண்டும்...

திருப்பம் இல்லா
திரைப்படம் கூட
விருப்பம் கொள்ள
செய்வது இல்லை...

வாழ்க்கை என்றும்
திறந்த வாயில்
எந்தப் பொருளும்
எப்பவும் நுழையும்...

சில நாள் நம்மை
சிரிக்க வைக்கும்
சில நாள் நம்மை
சிலிர்க்க வைக்கும்

சில நாள் சிறிது
சிந்திக்க வைக்கும்..
சில நாள் உறவை
நிந்திக்க வைக்கும்...

சில நாள் உறவு
சில நாள் பிரிவு
சில நாள் உயர்வு
சில நாள் சரிவு..

நாட்கள் மட்டும்
நகர்ந்து செல்லும்
தாங்கள் அறிந்ததை
பகர்ந்து செல்லும்...

வந்த வாய்ப்பை
உறுதியாய்ப் பற்ற
வாழ்க்கை உன்னை
அன்பாய் கொள்ளும்..

வருத்தப் பட்டு
வாழ்வை நகர்த்தினால்
அர்த்தம் என்பதை
வாழ்க்கை இழக்கும்...

நாள் என்பது எவ்வாறாயினும்
மனதில் நல்ல எண்ணம் விதைத்தால்
தினமும் நல்ல கற்பனை கலந்தால்
வாழ்க்கை அறுவடை வளம்பெற்றுயரும்..


ரா. முரளிதரன்..

எழுதியவர் : முரளிதரன் (18-Mar-14, 2:32 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : ovvoru naalum
பார்வை : 144

மேலே