ஒரு தலை காதல்
நிலமாய் தாங்கு என்றேன்
நாற்றாய் வேறிடம் செல் எனப் பணித்தாயே!
விதையாய் உன்னில் தூவு என்றேன்
ஆயிரம் விதையுண்டு என்னில் இடமில்லை விரட்ட விழைந்தாயே!
வேராய் விரவி வலிமை கொடு என்றேன்
ஆணி வேரோடு பறித்தெறிய முன் வந்தாயே!
அன்பென்னும் நீர் தேக்கு என்றேன்
வரப்புடைத்து வெளியேறத் துடித்தாயே!
வார்த்தை உரமிடு என்றேன்
அதிலும் கலப்படமென்று ஒதுங்குகிறாயே!
சோகம் களை என்றேன்
களையோடு சேர்த்தே எனையும் அழிக்கத் துணிந்தாயே!
வேலியாய் அரணாய் இரு என்றேன்
வேலியே பயிர் மேய்ந்த கதை கூறி தேற்றுகிறாயே!