காதல் தோல்வி

வாழ்வே என்னை என்ன செய்ய நினைத்திருக்கிறாய்?
நானோ என் நெஞ்சை நிலமாக்கி
உன் நினைவுகளை விதையாக்கி
என் குருதியை நீராக்கி
என் உயிரை உரமாக்கி
ஆறுதலை களைகொல்லியாக்கி
என் அன்பெனும் வேலியிட்டு
உம்மை ஆல் போல் தழைக்க செய்தேன்.
ஆனால் மனவாயிலில் நீயோ கோடரியுடன்...

வாழ்வே என்னை என்ன செய்ய நினைத்திருக்கிறாய்?
மனம் சிதைக்காமல் வாழ விடு...
இல்லை உன் மடியில் உயிர் அணைய ஆவன செய்.

எழுதியவர் : கீதாபாஸ்கரன் (18-Mar-14, 7:10 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே