செருப்பு
சரக் சரக் சங்கீத வாத்தியம்
ஏனோ தெரிவதில்லை
இன்னும் விளங்கவில்லை
குடிகாரர்களின் கால்களில்
நாங்கள் இருப்பதே இல்லை
எங்கள் வயதை கடன்
வசூலிப்பவன் மட்டுமே அறிவான்
கண்கள் தேடும்
பளபளப்பை நாடும்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
எங்கள் வீடே மாறும் ...
வாங்கி வாங்கியே தேய்ந்து
போனேன் .
ஏழையின் செருப்பைபோல ...
தேடலுடன் க நிலவன்