காதல்
எத்தனை ஈர்ப்புகள் ஈரங்கள்
எத்தனை கற்பனைகள் கவிதைகள்
எத்தனை சிந்தனைகள் சிதறல்கள்
எத்தனை பொய்கள் பொறாமைகள்
எத்தனை சந்தோசங்கள் சந்தேகங்கள்
எத்தனை கோலங்கள் கோபங்கள்
எத்தனை ஏக்கங்கள் ஏமாற்றங்கள்
எத்தனை உணர்வுகள் உரிமைகள்
எத்தனை போராட்டங்கள் போராளிகள்
எத்தனை சமாளிப்புகள் சமாதானங்கள்
இத்தனையும் கலந்த கலவையே
உன் பெயர் தான் காதலா?