மௌன மொழி

அரும்பாக தோன்றிய மொட்டு
மெதுவாக மலர்ந்தால் போல்
படிப்படியாக வளர்ந்து இன்று
பூரண மலராக முழுமதி தோன்றுகிறது
அழகிய ஒளி வீசும் பௌர்ணமியாக
இவ் அழகை காண மலர்ந்த
தோட்டத்து மல்லிகையாக
மின்னிடும் மின்மினியாக
வானத்து விண்மீன்கள் கொத்து
கொத்தாக பூத்திருக்க
நிலவொளியில் நிறைந்து அலைததும்பும்
பாற்கடலிலே முத்துக் குளிக்கவே
சாம்ராஜ்ய அரசிலங் குமரியாய் நிலவரசி
வலம் வருகிறாள் மெதுவாக மேகத்தினூடே
அரண்மனைக் காவலர்களாய் ஆடையணியா
விண்மீன்களின் துணை கொண்டு
மூடி இருந்த ஜன்னல் திரைவிலக்கி
மெல்ல அதனருகே கவிழ்ந்து படுத்து
கால்களிரண்டும் மேலும் கீழுமாய் நடனமாட
படிப்பதற்காய் விரித்து வைத்த புத்தகமும்
திறந்தபடியே எனை எதிர்பாத்து தவித்திருக்க
எனதிரு கண்களும் உள்ளமும் மட்டுமே
ஏனோ ஜன்னல் வழியே அழையா
விருந்தாளியா உல் நுழைந்து இருந்த
பெண்ணிலவோடு ஏதேதோ மௌன
பாசைகளில் பேசிக் கொள்கிறது...