வரலாறு புதுசு
மண்ணில் விளையும்
நெல் மணிகள்
விண்ணில் விளையுமா?
இயந்திரமயமாகுமா?
மண்ணை தாரை வார்த்துவிட்டதோ
எந்திரமயமான எந்திரன்...!
உழவன் கணக்கு பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சுமோ?
கடத்தல் மன்னர்களின்
சுயத்தால்
விவசாயம் அழியுமோ?
பசுமைப் புரட்சி எதில்?
சேற்றில் கால் பாதிக்கும்
உழவனின் வயிற்றில்
கீறிப் பார்ப்பதோ?
வறுமை எது?
உயிர் கிராமங்களை விழுங்கி
அரக்கர்கள் கூடும்
நஞ்சு நகரத்தில் வாழும்
வீணர்களோ?
வெட்டி வெட்டிச் சாய்க்கிறது
கோடரி அரக்கர்கள்
வெந்து வெந்து சாகிறது
பிஞ்சு வேர் குழந்தைகள் ...!
ஊடுருவ வழியின்றித்
தவிக்கின்றது மாரி
மும்மாரிப் பொழிய மறுக்கின்றது
தண்டனை காலம் என்று
தீருமோ?ஓயுமோ என்று ..!