இறைவனின் படைப்பு

வெட்டவெளிக் காட்டுக்குள்ள
வெள்ளிநிலா முளைச்சிருக்கு
புத்தம் புதுவாக...
பொத்தம் பொதுவாக...

குற்றாலத்து சீசன் போல
தென்றல் காத்தும் அடிச்சிருக்கு
புத்தம் புதுவாக ...
பொத்தம் பொதுவாக ...

உனக்காக ஒன்று...
எனக்காக என்று ...
ஒருபோதும் தெய்வம்
கொடுப்பதில்லை ...

மாறி மாறி மாரி பொழிவதும்
மனிதன் செய்யும் செயலாலே
புத்தனும் ஏசுவும் கூட
புத்தம் புதுவாக ...
பொத்தம் பொதுவாக ...

இயற்கை எல்லாம் ரசிக்கதானே
ருசிக்க நினைத்தாய் மனிதா
எண்ணச்சிறகை விரித்து உயர உயர பறக்கிறாய்
எங்கு சென்றபோதும் மண்ணுக்கு உரம் நீயடா!!

கசக்கிப் போட்ட ரோஜாவாக
முள்ளில் சிக்கித் தவிக்கிறாய்
உனக்கு நீயே வேலி போட்டு
உள்ளச் சிறையில் முடங்கிக் கிடக்கிறாய் !!

எழுதியவர் : கனகரத்தினம் (17-Mar-14, 12:05 am)
Tanglish : iraivanin PATAIPU
பார்வை : 662

மேலே