பெண்ணே உன்னால்
இதயம் வலிக்கிறது-
குடிகொண்ட அவளது
தூக்கம் கெடுமோ-என்று
துடிக்க மறந்ததால்...
என்னுடைய வானத்தில்
எப்போதும் சூரியகிரகணம்
சூரியன் மறைகிறான் -
என் முன்னே
நிற்கும் உன்னால்...!
முகவரியை
தொலைத்து விட்டேன்
உன்
முக வரியில் என்னை
தொலைத்த பின்னே....!
பெண்ணே....!
நீ என்னே பேனா மையோ?
என்னுள் நீ இருக்கும்வரை
எழுத்துகள் தீர்வதில்லையே...!
திரும்ப திரும்ப
பார்க்கிறேன் கண்ணாடியை....
என்னுள் இருக்கும் உன்னை
ஒருமுறையேனும் காட்டதோ?....