வெற்றியும் முன்னேற்றமும்

சொற்கள் உணர்ததிடும் அர்த்தங்கள்
​சொல்லாட்சி புரிந்திடும் வாழ்விலே !
​அற்பமாய் நினைக்கும் வார்த்தைகள்
அரசாட்சி நடத்திடும் ​மண்ணிலே சில !

வெற்றி என்பர் வென்றிடும் எதையும்
வெற்றிடம் காணலாம் ஆய்ந்திட்டால் !
வெற்றியும் அடைந்திடுவர் தனிமனிதர்
வெற்றியும் பெறுவர் குழுவாய் ஆகினும் !

இறுதிப்படி அல்லவே வெற்றி என்பதும்
இலக்கை நெருங்கிடும் அறிகுறிதானே !
ஊக்கமுடன் நடைபோட ஊன்றுகோல்
ஊன்றி முன்னேற உறுதுணை வெற்றி !

முன்னேற்றம் என்பதோ ஒருமையல்ல
முன்னேறும் நாட்டின் பன்முகவளர்ச்சி !
முன்னேற்றம் என்பதோ கூட்டுமுயற்சி
முழுவடிவம் பெறுவதின் முன்னோட்டம் !

பலனன்று தனிநபர் முன்னேற்றம் என்றும்
பாதையன்று அவர்வழியே சென்றிடவும் !
நிலையன்று தவறானபாதை முன்னேற்றம்
நீடிக்காது அவ்வழி முன்னேற்ற பயனும் !

முன்னேறும் எண்ணம் வளர்ந்திட வேண்டும்
வெற்றியெனும் படிகளை கடந்திட வேண்டும் !
முழுமூச்சாய் உழைத்திடல் வேண்டும்
முழுவெற்றியும் அடைந்திடல் வேண்டும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Mar-14, 11:26 am)
பார்வை : 1666

மேலே