தாய்மடி
வட்ட நிலவை
எட்டி பிடித்து...
வீட்டிற்குள்ளே நான் கட்டி அனைப்பேன்...
கண்படும் தூரத்தில் உன்னை வைத்து...
என் கண்ணார கண்டுக்களிப்பேன்...
கண்மை பொட்டிற்று
உனக்கு கண்திஷ்டிவும் நான் எடுப்பேன்...
தத்தித்தாவும் வெண்ணிலவே...
தானாய் முளைத்த மெல்லினமே...
வேரில்லாமல் மலர்ந்தாயோ...
வெளிச்சம் தர பிறந்தாயோ...
உன்னை,
தூரத்தில் தூக்கி எறிந்தவர் யார்?
தரணியில் நீ மீண்டும்
பிறந்திட என் “தாய்மடி” தருகிறேன்..
தவழ்ந்திட நீ வாராயோ?