ஜோதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜோதி |
இடம் | : விருதுநகர் |
பிறந்த தேதி | : 26-Jun-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 10 |
தமிழச்சி
கைம்பெண்
அடுப்பன்கறையில் இருந்து
ஓர் ஆயுதம் உருவாகிடுமோ?
முன்பு ஏற்றிவிட்ட ஏணியும்,
முதல் முறை ஏறித்தான் பார்த்திடுமோ?
ஒளியில்லா இருளில்
உளியில்லா சிலையாகிடுமோ?
அர்த்தம்மில்லா மூடர்களின்
வாய்யடைக்க,
சத்தம் மட்டும் எழுப்பிடுமோ?
ஒற்றைக்கை ஓசையால்!!!
நான்கு பக்கம் சாலை இருந்தும்
நான் மட்டும் போகிறேன்
ஒற்றையடி பாதையில்...
மையில் கல்லாய் வழிகாட்ட,
என் கையிலோ இரு பெண்
நானோ கைம்பெண்...
கைம்பெண்
அடுப்பன்கறையில் இருந்து
ஓர் ஆயுதம் உருவாகிடுமோ?
முன்பு ஏற்றிவிட்ட ஏணியும்,
முதல் முறை ஏறித்தான் பார்த்திடுமோ?
ஒளியில்லா இருளில்
உளியில்லா சிலையாகிடுமோ?
அர்த்தம்மில்லா மூடர்களின்
வாய்யடைக்க,
சத்தம் மட்டும் எழுப்பிடுமோ?
ஒற்றைக்கை ஓசையால்!!!
நான்கு பக்கம் சாலை இருந்தும்
நான் மட்டும் போகிறேன்
ஒற்றையடி பாதையில்...
மையில் கல்லாய் வழிகாட்ட,
என் கையிலோ இரு பெண்
நானோ கைம்பெண்...
வேலெறியும் விழி கொண்டு
வில்லேற்றும் இமை கொண்டு
மோகப் பார்வை வீசும்
போகப் பொருளா நீ?
பெண்ணாய் பிறந்ததினால்
படும் பாடு கொஞ்சமல்ல
வெறுத்து வெறுத்து
பொறுத்து பொறுத்து
நீ சகித்து கொண்டது போதும்
உன் சகிப்புத் தன்மைக்கு
சமாதிக் கட்டு
வீதியில் இறங்கி ்
தனித்து நடக்க
உரிமை இல்லா
சுதந்திர நாட்டின் அடிமை நீ
வன் கொடுமைக்கு
நீ பலியானது போதும் ீ
பாலியல் கொடுமைக்கு
நீஇரையானது போதும்
அதை திரையிட்டு
மறைத்ததும் போதும்
சதைக்கு அலையும் கழுகுகளை
வாலாட்டும் வாணரங்களை
வாள் எடுத்து வீசு
புயல் என சீற்றம் கொண்டு
சுனாமியாய் சுழன்றடித்து
எரிமலையாய் வெகுண்டெழுந்து
கேடு கெட்ட காமுகனை
கோளெடுத்து வீழ்த்து்
நீ பலவீ
வட்ட நிலவை
எட்டி பிடித்து...
வீட்டிற்குள்ளே நான் கட்டி அனைப்பேன்...
கண்படும் தூரத்தில் உன்னை வைத்து...
என் கண்ணார கண்டுக்களிப்பேன்...
கண்மை பொட்டிற்று
உனக்கு கண்திஷ்டிவும் நான் எடுப்பேன்...
தத்தித்தாவும் வெண்ணிலவே...
தானாய் முளைத்த மெல்லினமே...
வேரில்லாமல் மலர்ந்தாயோ...
வெளிச்சம் தர பிறந்தாயோ...
உன்னை,
தூரத்தில் தூக்கி எறிந்தவர் யார்?
தரணியில் நீ மீண்டும்
பிறந்திட என் “தாய்மடி” தருகிறேன்..
தவழ்ந்திட நீ வாராயோ?
எங்கே போய்ச்சொல்ல?
சில மனித இதயம் கல்லானதை !
மன்னிக்கவும்?
கற்களும் கோவித்து கொள்ளும் !
எனக்கு கூட இதயம் உண்டென்று !
ஆறுதல் என்ன சொல்ல?
என் தோழிக்கு !!
காரணம்? அவள் தங்கையின்
திருமணம் “அவளுக்கு முன்” !!
பெண்மையின் அடையாளம்
வெட்கமானால்;
நிலவும் கூட பெண் தான் !
தெரிகிறது அதன் வெட்கம்
கார்மேகத்திற்கு
“இடையில்”
புள்ளி வைத்தவன்
கோலம் போட மறந்துவிட்டான்....
பெற்றவள்
பாலுட்ட மறந்துவிட்டாள்....
குப்பைத்தொட்டியும்
சோறுட்ட மறந்துவிட்டது....
பிச்சையிட்டவன்
காலனா செல்லாததை மறந்துவிட்டான்....
தெரு குழாயும் தண்ணீர்
தர மறந்துவிட்டது....
அனாதை இல்லமும்
அனைக்க தவறிவிட்டது....
ஒரு வேலை உணவில்லாத நான்
உணவிடுகிறேன் !!!
பறக்கும் பறவைகளுக்கு...
என் புண்ணான தேகத்தை
மண்ணுக்கு அளிக்கிறேன்
“தானமாக”...
ஒன்றரை வயதில் !!!