கைம்பெண்

கைம்பெண்

அடுப்பன்கறையில் இருந்து
ஓர் ஆயுதம் உருவாகிடுமோ?
முன்பு ஏற்றிவிட்ட ஏணியும்,
முதல் முறை ஏறித்தான் பார்த்திடுமோ?
ஒளியில்லா இருளில்
உளியில்லா சிலையாகிடுமோ?
அர்த்தம்மில்லா மூடர்களின்
வாய்யடைக்க,
சத்தம் மட்டும் எழுப்பிடுமோ?
ஒற்றைக்கை ஓசையால்!!!
நான்கு பக்கம் சாலை இருந்தும்
நான் மட்டும் போகிறேன்
ஒற்றையடி பாதையில்...
மையில் கல்லாய் வழிகாட்ட,
என் கையிலோ இரு பெண்
நானோ கைம்பெண்...

எழுதியவர் : கவி குழலி (18-Sep-14, 4:19 pm)
சேர்த்தது : ஜோதி
Tanglish : vaazhkkai
பார்வை : 77

மேலே