இறைஉணர்வு

நிலம் முதலாய் ஐம்பூதங்கள்
உலவுகின்ற உடலெடுத்தேன்!
நலமென புலன்கள் வழிசென்றேன்!
பலனாய்த் துன்பத்துத் தலைப்பட்டேன்!

கலம் பொங்கும் பாலின் தணல் குறைத்தல் போல
புலன் அடங்க மனம் அடக்க பழகலானேன்!
மலம் கரைய செருக்கடங்கி நான் மறைய
நல்ஞானவழி நின்று ஒழுகலானேன்!

பள்ளம் பார்த்து பாய்ந்தோடும்நீரினைப்போல்-என்
உள்ளம் நோக்கிஅமைதி நிறைவு வரும் வண்ணம்
கள்ளம் போக்கி பொய்மை நீக்கி மனம் ஒன்றி
தள்ளாது தவம் இயற்ற இறைநிலையே உதவுவாய்!!
மறைபொருளே அருளுவாய்!!

எழுதியவர் : usharanikannabiran (18-Sep-14, 4:14 pm)
பார்வை : 76

மேலே