ஆறாம் அறிவு

சிரிக்க தெரிந்த மிருகம் மனிதன்

காதலிக்க தெரிந்த மிருகம் மனிதன்

கண்ணீர்விட்டு அழுகும் மிருகம் மனிதன்

துரோக குணம் கொண்ட மிருகம் மனிதன்

வாழ விடாமல் காலை
வாரிவிடும் மிருகம் மனிதம்

தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள
சட்டங்கள் போடும் அபூர்வ மிருகம் மனிதன்

சீர்திருத்தங்கள் செய்ய
மனிதருள் மகான்களை
தேடி காத்திருக்கும் மிருகம் மனிதன்

மிருகத்திலிருந்து வேறுபட
அதிகமாய் ஒரறிவு பெற்ற
அதிசய மிருகம் மனிதன்

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (18-Sep-14, 2:07 pm)
Tanglish : aaram arivu
பார்வை : 120

மேலே