வலியும் வழியும்
நீ வருவாய் வருவாய் என்றேன்...
நீ தருவாய் தருவாய் என்றேன்..!
நீ ஏன் வந்தாய்...?
நீ ஏன் தந்தாய்...!
நான் சொன்னது அன்பினை,
நீ தந்தது வலியினை..!!
வலியும் எனக்கு அனுபவம் தந்தது...
அனுபவம் தான் வழி சொன்னது ..!!!
வழியோ எனக்கு வாழ்வு தந்தது..
வாழ்வோ இங்கே நலமாய் போகுது..!!!