வாள் சுழற்று

வேலெறியும் விழி கொண்டு
வில்லேற்றும் இமை கொண்டு
மோகப் பார்வை வீசும்
போகப் பொருளா நீ?
பெண்ணாய் பிறந்ததினால்
படும் பாடு கொஞ்சமல்ல
வெறுத்து வெறுத்து
பொறுத்து பொறுத்து
நீ சகித்து கொண்டது போதும்
உன் சகிப்புத் தன்மைக்கு
சமாதிக் கட்டு
வீதியில் இறங்கி ்
தனித்து நடக்க
உரிமை இல்லா
சுதந்திர நாட்டின் அடிமை நீ
வன் கொடுமைக்கு
நீ பலியானது போதும் ீ
பாலியல் கொடுமைக்கு
நீஇரையானது போதும்
அதை திரையிட்டு
மறைத்ததும் போதும்
சதைக்கு அலையும் கழுகுகளை
வாலாட்டும் வாணரங்களை
வாள் எடுத்து வீசு
புயல் என சீற்றம் கொண்டு
சுனாமியாய் சுழன்றடித்து
எரிமலையாய் வெகுண்டெழுந்து
கேடு கெட்ட காமுகனை
கோளெடுத்து வீழ்த்து்
நீ பலவீனமானவள் அல்ல...
மதக் களிறை மண்டியிட வைக்கும்
மகத்தான சக்தி அல்லவா?
உன் சக்தி உலகிற்கு புரியட்டும்
காமுகப் பேய்கள்
ஓடி ஒழியட்டும்....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (19-Mar-14, 8:23 am)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 133

மேலே