உடல்தானம்

புள்ளி வைத்தவன்
கோலம் போட மறந்துவிட்டான்....
பெற்றவள்
பாலுட்ட மறந்துவிட்டாள்....
குப்பைத்தொட்டியும்
சோறுட்ட மறந்துவிட்டது....
பிச்சையிட்டவன்
காலனா செல்லாததை மறந்துவிட்டான்....
தெரு குழாயும் தண்ணீர்
தர மறந்துவிட்டது....
அனாதை இல்லமும்
அனைக்க தவறிவிட்டது....
ஒரு வேலை உணவில்லாத நான்
உணவிடுகிறேன் !!!
பறக்கும் பறவைகளுக்கு...
என் புண்ணான தேகத்தை
மண்ணுக்கு அளிக்கிறேன்
“தானமாக”...
ஒன்றரை வயதில் !!!