முன் வினைத் தீதோ
விழிகளின் தவறோ இல்லை
முன் வினைத் தீதோ
நான் உனைக் கண்டது !
வரமோ இல்லை சாபமோ ?
உன்னோடு பழகியது !
சொந்தச் செலவில் சூனியம் வைத்ததுபோல்
சுயம் தொலைத்தே அலைகிறேன் !
உன்னைவிட்டு ஒரு நிமிடமும் பிரிய மனமில்லை
சொன்ன வார்த்தைகள் எல்லாம்
என் இதயக் கல்வெட்டில் செதிக்கி விட்டேன் !
பிரிவோம் என்று சற்றும் நினைக்கவில்லை
பிரிந்தோம் பிரிய மனமில்லாமல்
எல்லாம் கருத்து வேறுபாட்டினால் !
நம் பிரிவில் உணர்ந்தேன்
காதலின் இன்ப துன்பத்தை
தவறு உன்னுடையதோ, இல்லை
என்னுடையதோ, மறப்போம்
சிறு சிறு சண்டைகள் போதும்
பிரிவென்னும் துயரம் வேண்டாம் !