விலைமாது

ஆசைதான் கணவனுக்கு
மடிவிரித்து .....!!!!
அவனுடன் மட்டுமே
கைகோர்க்க வேண்டுமென்று
பாவம் விதிவந்து விளையாடியது
விலைமாது ஆனேன் .....!!!!

பற்றி எரிகிறது பாழும் உடல்
தீ கொண்டும் பொசுக்கவில்லை ...
திராவகம் கொண்டும் கழுவவில்லை ....!!!
வீசும் தென்றலும் ...
அனல் காற்றாய் மாறுகிறது ...!!!

விரல்தீண்டி விரல்தீண்டி ...
விம்முகிறது என் தேகம் ...!!!!
சிறகொடிந்த பறவையாக
கழிகிறது என் நாட்கள் ....!!!

காயம்பட்டு காயம்பட்டு
மரத்துபோச்சு என் உடல் ...
விடைக்கான முடியாத
வினாவாக மாறியது என் வாழ்கை ...!!!

உடல்கட்டு உருகுளையும் வரை ஓடவேண்டும் ...
பந்தையகுதிரையாக விதியின் ஓட்டத்திலே ...!!!!
உயிரிருந்தும் பிணமாய் வாழ்கிறேன்

முதுமை இல்லா இளமை ...
குறையாத செல்வம்
விருப்பிய பொருள்வேண்டுமேன்று ...
கேட்கவில்லை .....!!!!
விலைமாது இல்லா விடியல் வேண்டுமென்று
வரம்வேண்டுகிறேன் ....!!!
மானிடராய் பிறந்த அத்தனை தெய்வங்களையும் ...!!!!!

எழுதியவர் : மணிவண்ணன் சாமிக்கண்ணு (19-Mar-14, 1:10 pm)
பார்வை : 509

மேலே