மாயாஜாலம்
உன்னிலிருந்து
நீயேதான்
பிறக்கிறாய்....
விண்ணிலிருந்து
விண்ணும்
மண்ணிலிருந்து
மண்ணும்
பொன்னிலிருந்து
பொன்னும்
உன்னிலிருந்து
நீயும்
என்பதாக,
முடியும் எதுவும்
ஜனனம்
புதைப்பதில்
கவனமாய் இருக்கிறது....
காகிதச் சோலைக்குள்
உதிரம்
பூக்களை கொய்யும்
சிறகுகளை
வரைந்து கொண்டே
ஓவியமாகிறது
நீ நீந்தி செல்லும்
மாயாஜாலம்....