மாதாவான குருவுக்கு

கல்வி களஞ்சியம் சேலையில் வந்தது.
களிப்பு வதனம், முகத்திரியில்
சிரிப்பு அகல் ஏற்றியது.

யாரோ ஒருவனாக இருந்த நான்
யாரென அறிய,
யாரோ ஒருவராக வந்தார்.

கல்வி கற்க வந்தேன்.
கற்றேன்,
கல்வி கற்றுத்தரும் ஒரு கல்வியால்.

சென்னை தமிழ் பேசிய நாவில்
ஆங்கிலம் அரங்கேறியது.
அவர் நாவில்,
ஆங்காங்கே பூத்த தமிழ்
அழகு சோலை கோர்த்தது.

வளர்ந்த என்னை அறிந்துக் கொள்ள
வருகை தந்தார் என் அன்னை.
செதுக்கிய வார்த்தைகளால்
அவர் பதித்த முத்திரை,
மாற்றியது என்னை
நானே அறியாத "நல்லவனாய்".

வேலைக்குச் செல்லும் அன்னையை
நாளெல்லாம் காண முடியா
ஏக்கம் கொண்டேன்.
இந்த நாட்களில் தான்
கல்லூரியிலும் காண்கிறேன்,
அன்னையை.

எழுதியவர் : கறுப்புத் தமிழன் (19-Mar-14, 2:34 pm)
சேர்த்தது : ஆல்வின்.சே
பார்வை : 137

மேலே