கண்ணீர் தேசம்

கலாச்சாரம்,
கருவறைக்குள்ளே கல்லறையானது!
பருவத்துக்குள்ளே படுக்கைப்போனது!
காதலாலே சீரழிந்து -அநியாய
ஊடலாலே அழிந்துப் போனது!
தேசமே,
ஒன்றான திருமணமும் இன்று
இரண்டாக போனதும் ஏன்?
இனிதுவந்த இல்வாழ்வும்
இழிவாய் போனதும் ஏன்?

வளர்பிறையாய் வளர்ந்த காதல்
திருமணத்தில் தேய்வுமுற-கண்ணீரின்
நடுவே நாடு
தத்தளிப்பது ஏனோ?
பட்டினத்தார் சொன்னதெல்லாம்
பாசாங்கு செய்ததுபோல் -பாவை
அவளிங்கு பாதிஉடம்புடன்
ஆடுவதும் ஏன்?
கைக்குத்தல் அரிசியெல்லாம்
கைநழுவி போயிடவே
அரை வேக்காடு
இப்போ ஆடம்பரமாய்
போனதும் ஏன்?
கட்டிவந்த பெண்ணும்
இங்கே
கைம்பெண்ணாய் போகையிலே
பத்தியில் வந்தமக
நீதிகேட்டு போவதும் ஏன்?
பட்டாடை உடுத்தியவள்
அதில்
பாதியை குறைப்பதும் ஏன்?
கடவுள்பெயராலே கள்வர்கள்
சிலர் இங்கு
காமத்தில் திளைப்பதும் ஏனோ?
ரசிகன் பெயராலே
கோடிகளை மறைக்கும்
மிருகங்கள்
வாழ்வது ஏன்?

காந்தி முகம்போட்டும்
கள்ளநோட்டு குறையிலையே!
இலட்சியவாதிகள் வந்தும்
இலஞ்சம் இங்கே குறையிலையே!
உழைத்தவன் வியர்வைஎல்லாம்
மதுக்கடையில் முடங்கிப்போக
பசியில் பிள்ளைக்கு
கண்ணீரும் சுரக்கலையே!

கண்ணீரும் இங்கே
கதையாகி போனது ,
அரசியல் இப்போது
பெரும்பாடாய் போனது,
கல்லான சிலைகள்கூட
கண்மூடி போனது,
நாடும் இப்போது
கண்ணீரில் மிதக்குது,
நாளை என்பதெல்லாம்
வெகுதூரம் போனது,
சாதிக்கொடுமை இங்கு
தலைவிரிச்சி ஆடுது,
தாழ்ந்து போன தலை
இன்னும் தூக்காம கிடக்குது,
போதும்,
போதும்,
இப்படியும் ஒரு நாடு
சுடுகாடாய் மாறும்முன்னே
நல்வழி ஒன்று தேடுங்களேன்!!!

எழுதியவர் : vibranthan (19-Mar-14, 6:01 pm)
பார்வை : 124

மேலே