அவசர புருஷர்களுக்கு

அதிவேகத்தில் மூடப்படுகின்றன
நிதானத்தின் கண்கள்
அதே வேகத்தில் திறக்கப் படுகின்றன
தவறுகளின் வாய்கள்

எப்படியாயினும் எவரையேனும்
வீழ்த்தி மிதித்து விட வேண்டும்-என்ற
வேட்கையுடன்அலைகின்றன கால்கள்

சுயநலத்தின் பற்கள் தெரிய சிரித்து
நலிந்தவனை நகைப்பிலாழ்த்தி
ஆளாளுக்கு அலைகின்றன
ஆளுமை முகமூடி தரித்த
அவசர கூட்டம்

சமிக்கைகள்,கோடுகள்,எல்லைகள்
இன்னும் அவர்களால் மீற முடிந்த
அனைத்தையும் தாண்டி
யாரையேனும் தண்டித்து
அடைந்து விடுகிறார்கள் அடைவை

இலக்கை அடைவதற்கென
இவர்கள் கொள்ளும் இறுமாப்பு
ஒருவனை கொல்லுமாக இருந்தால்
“இவன் ஊனமாகட்டும்” என
யாரேனும் சபித்தால்
நீங்கள் எப்படியோ?
ஆனால் நான்;
அவனை கோபிக்க மாட்டேன்!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (19-Mar-14, 7:59 pm)
பார்வை : 97

மேலே