கபட வனம்

பெருவனமொன்றின் முகப்பில் அமர்ந்திருந்தது
கால்களில் நிழல் முளைத்த அவ்வெண்முயல்
தனது பச்சை பற்கள் விகசிக்க
உள்ளே வாவென்றது வனம்
இருள் நனைந்த வனத்தின் சருகுகளில் யாக்கை மறைத்து
வன்ம நஞ்சு ததுப்பி சுருண்டு கிடந்தன
கோடான கோடி கருநாகங்கள்
ஏதுமறியா முயலோ
வனத்தினுள் நுழைய ஆயத்தமானது