ஆக்கம்
கிளைதனில் தொங்கிய தூக்கனாங்கூடு !
அத்துவானமாய் எட்டத்துப்பார்வைக்கு !
என்றாலும்,
அது ஸ்திரமாய் ஒரு உயிர் தங்குமிடம் !
அதிலேயும் ஒரு வாழ்க்கையுண்டு !
நம்பிக்கையுடன் வாழ்ந்து பார்க்க !
அதன் கட்டமைப்பு குருவிக்கு சாதனை !
நித்தமும் மகிழ்ந்து அதை கொண்டாடும் உயிர் !
குதூகலம் கும்மாளம் என இரண்டறக்கலந்து !
சற்றும் மதியாமல் அதை கணநேரத்தில் !
கொய்து போடும் மதியற்ற மட மனிதா !
பொருப்பாயா நீ உன் வீடு இடிக்கப்பட்டால்?
உதாசீனப்படுத்தாதே !
உழைப்பையும் அதன் உன்னதப்பயனையும் !
சிதிலங்கள் ஆகக்கூடியதே !
உன் சிங்கார வீடும் ஒருநாள் !
என்ன ஒன்று !
அதை பார்க்கக்கூட தங்காது உன் அற்ப உயிர் !
உழைப்பை நேசி உழைக்கும் உயிரை நேசி !
அது பறவையானாலென்ன?
மிருகமானாலென்ன?
உனைப்போன்ற மனிதனானாலென்ன?
அனைவரும் சமமே பாடுபடும் வர்க்கத்தில் !!