அகதிகளாய் தூரதேசம்

கனவுகள் இல்லை
கடமைகள் இல்லை
ஊரும் இல்லை
உறவுகளும் இல்லை

அணைத்துக்கொள்ள
தாயும் இல்லை
ஆறுதல் சொல்ல
தந்தையும் இல்லை

ஓடி விளையாட
தம்பியும் இல்லை
ஒளிந்து விளையாட
தங்கையும் இல்லை

மறைந்து விட்டது
பந்தம் அன்று
தனிமை தருணமே
சொந்தம் இன்று

வானம் உண்டு
வளம் இல்லை
வேளி உண்டு
காவல் இல்லை

வாழ்ந்த வீட்டின்
சாம்பல் கொஞ்சம்
குடும்பத்தில் நான்
மட்டுமே மிச்சம்

தாய்மண் வாழ்த்தியது
தலைசிறக்க போற்றியது
தஞ்சமானவன் தலமையாணன்
தமிழனுக்கு எதிரியனான்

அடங்கா இனவேசம்
அணுகுண்டுகளாய் ஆவேசம்
இரையானது தாய்தேசம்
அகதிகளாய் தூரதேசம்

வந்துவிட்டோம் வழியின்றி
தங்கிவிட்டோம் மனமின்றி
வாழ்கிறோம் கரையின்றி
எதிர்காலம் நிஜமின்றி

எழுதியவர் : சிவா (19-Mar-14, 9:40 pm)
பார்வை : 144

மேலே