ஆறுநூறை தொட்டு விட்டேன்

​ஆறுநூறை தொட்டு விட்டேன் இன்று ​
​ஆறுகடலை கடந்திட்ட உணர்வு எனக்கு ​!
ஆறாத மனமுடன் ஆரம்பித்தேன் எழுதிட
ஆறுதலாய் அணைத்தது நம் எழுத்து தளம் !
ஆற்று வெள்ளமாய் பெருகியது எண்ணமும்
ஆறாம் அருவியாய் விழுந்தது எழுத்துக்களும் !

ஆற்றலாய் சிறகிருந்தும் பறக்காமல் இருந்தேன்
ஆறுதலாய் கவிதைவடிவில் பறந்து திரிகின்றேன்
ஆற்றலை அறிவிக்க அடிபதித்தேன் தளத்தினில்
ஆறறிவும் ஏற்றமுடன் களிப்புடனே களத்தினில்
ஆறுசுவை பல்சுவையானது பரிமாறிய கவிகளால்
ஆறுவகை உணர்வுகளும் உரமேறியது வரிகளால்

ஆற்றலும் அன்புமே ஆளுமை புரிகிறது இங்கே
ஆறாக பாய்கிறது தேனனான கவிதைகள் இங்கே !
ஆற்றுகிறது உள்ளத்தை கனிவான கருத்துக்கள்
ஆறஅமர யோசிக்க வைக்கிறது வைரவரிகள் !
ஆற்றலை போற்றும் அன்புமிகு நெஞ்சங்களே
ஆறுநூறும் ஆயிரமாக ஆசியும் அளித்திடுங்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Mar-14, 12:51 pm)
பார்வை : 151

சிறந்த கவிதைகள்

மேலே