துடிக்கிறது ஒரு இதயம்

முதல் முறை பார்த்தேன்
என் முகம் மலர்ந்தது
என் மனம் கேட்டது
அவன் யார் என்று ??
என் கண்கள் கூறியது
அவன் உன் காதலன் என்று !!
அவனுள் தான் எத்துனை காந்தம்
என்னையே இழுத்து விட்டான் - அவன் பக்கம்
எந்த நேரமும் அவன்
நினைவில் - நான்
எப்பொழுதாவது நினைப்பேன் அவனுள்
நான் உள்ளேனா என்று ?
அவனை பார்க்க கண்கள் எங்கும்
நினைக்க மனம் ஏங்கும்
அவன் நினைவுகளும் சுகம் தான்
அவன் பார்வையின் ஸ்பரிசத்தில்
என் கண்கள் அவனை
நோக்காமல் வெட்கத்தில் நெளிய
வைத்த கண் வாங்காமல்
அவன் பார்ப்பான்
நிஜங்கள் சோகத்தை தந்தாலும்
நினைவுகள் நிம்மதியை தரும்
அன்று துடித்தது என் மனம்
- அவனை மணந்து விட
ஆனால் இன்று துடிக்கிறது
என் மனம் அவனை மறந்து விட
இது காதல் நதி இல்லையடி பெண்ணே
உன் கண்கள் உனக்கு செய்த சதி ..