ஒற்றை ரோஜா

திரண்ட பனித்துளிகளையை
தாங்கும் இதழ்களே ...

என் இதயம் தாங்கிச்செல்வாயா?

முற்களை சூடிய பூவே
என் கற்பனை தருகிறேன் ...

சுமந்து நீயும் செல்வாயா?

இதயத்தின் நிஜ சின்னமே
என் பிம்பத்தை ஏற்றிக்கொள்வாயா ?

பெண்களின் கூந்தலில்
சுகம் தேடுகிறாய்

ஆண்களின் வாசத்தை
நுகர்ந்து போகிறாய்

சிவந்த இதழ்களால்
கவிச்சிந்தனை வளர்கிறாய்

எனக்காக தூது போ
என் நாட்டு ராணுவ வீரர்களுக்காக

வாஞ்சையோடு க நிலவன்

எழுதியவர் : க நிலவன் (20-Mar-14, 1:51 pm)
சேர்த்தது : க நிலவன்
Tanglish : otrai roja
பார்வை : 109

மேலே