அன்பு
அண்ணனிடம் ஏங்கினாள் குட்டித்தங்கை
ஒரு மிட்டாய்க்காக
ஒலிபெருக்கி அமைத்துக்கொண்டிருந்த அவனுக்கு இது இம்சை ஒலியாகக் கேட்டது
மேடையில் பேசிய மாமணியோ அன்பின் மொத்த
குத்தகைகாரர்ப் போல் வானளாவ சொல் மழை பொழிந்து கொண்டிருந்தார்
கூட்டத்திலோ ஒலிபெருக்கியை மிஞ்சிய ஒலி
வேர்வை வழிந்த அண்ணனுக்கு எடுத்துஇக் கொடுத்தால் ஒரு கைக்குட்டையை அந்த குட்டிக் குழந்தை
தன்னையறியாமல் கண்ணீர் சிந்தினான் அந்த அன்பை எனும் சொத்தை மறந்த அண்ணன்
அன்பு அன்பு என்று மேடையில் பேசும்
ஆசாமிகள் கூட வீட்டில் வைத்து விட்டு
வந்தது போன்றிருந்தது தங்களின் அன்பு
எனும் சொத்தை
மிட்டாயை வாங்கித்தந்து பூரித்தான் அவள் புன்னகைக்கண்டு
அன்புடன் ,
இஸ்மாயில்

