ஏடழகு கோடழகு
ஏடழகானது
வள்ளுவன் குறளினால்
ஏடவிழ் மலரழகானது
தென்றலின் வருகையினால்
கோடழகானது
வானவில் வரிகளினால்
கோடொடிந்தும் அழகானது
கவிக் களிறெழுதிய காவியத்தினால்
வீடழகானது
அவள் வருகையினால்
வீடெழில் இன்பமானது
அவள் தந்த மழலை மலர்களினால்
நாடழகாகும்
நல்ல மனித உள்ளங்களினால்
நல் மனிதர்களின் தேர்வினால்
நாடு நல்லரசு காணும் !
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
"கவிக் களிறெழுதிய காவியத்தினால் "
வரி புரிந்து கொள்ளப்பட்டதா தெரியவில்லை.
வியாசர் மகா பாரதத்தை விரைந்து சொல்ல .
எழுத்தாணி உடைந்து விட தன கோடு (கொம்பு )
உடைத்து தொடர்ந்து காவியம் எழுதி முடிக்கிறார்
கவிக் களிறு (யானை ) வேழ (யானை )முகன்.