உண்மை நண்பருக்கு எண்ணப் போராட்டங்கள்

என்னால் எழுந்த சோகங்கள்
ஏன் இப்படி ஆனதென்று
எண்ணாத நாட்களில்லை என்னவளே
எப்படி இதனை தீர்ப்பேனென்று ...

தாயாய் என்னிடம் அறிமுகமானாய்
சேயாய் நானுன்னிடம் அடிபணிந்தேன்
வீணாய் மற்றவர்க்கு கற்பனைகள்
கள்ளமில்லா உள்ளங்களை கறைப்படுத்த ...

பேசினால் தானே விபரீதங்கள்
எழுதினால் தானே மனப்போராட்டங்கள்
எழுதாமலும் இருக்க இயலவில்லை
பேசாமலும் முயன்றேன் முடியவில்லை ..

உன்னை என்னிடம் அறிமுகப்படுத்தி
உள்ளங்கள் இரண்டையும் நெருக்கமாக்கி
உயர்ந்த உள்ளம் கொண்டவுன்னை
இறைவன் என்னிடம் தந்ததுமேனோ ...

புரியாமல் தவிக்கின்றேன் என்றும்நானே
புரிந்துக்கொள்பவர் உண்மை அறிந்திட்டாலே
புவிதனில் என்னால் ஏற்பட்ட
சோகங்கள் அனைத்தும் கரைந்திடாதோ ...

ந. தெய்வசிகாமணி

எழுதியவர் : ந. தெய்வசிகாமணி (22-Mar-14, 6:38 am)
பார்வை : 86

மேலே