+அடடா என்ன அழகு+

அடடா என்ன அழகு
முடிந்தால் கொஞ்சம் பழகு
இதுதான் விந்தை உலகு
இதயம் வலித்தால் விலகு

விதைகள் போட்ட பயிரும்
மேகம் அழுக வளரும்
காதல் விதைத்த உள்ளம்
கவிதை கயல்கள் துள்ளும்

தினமும் நிலவை ரசிக்கும்
திங்கள் தணலும் ருசிக்கும்
மனதின் காயம் ஆரும்
மயக்கம் கலக்கம் தீரும்

இரவில் கனவைத் தேடும்
இதயம் தானாய் பாடும்
பறவை கூட்டம் போல‌
சிறகை விரிக்கும் மூளை

காதல் கலையின் ஊடே
வாழும் கலையும் கற்றால்
வாழ்த்தும் காதல் கூட‌
மகிழ்ச்சி என்றும் முற்றா

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Mar-14, 7:24 am)
பார்வை : 199

மேலே