காதலை தேடி

சமுகத்தில் அங்கீகரிக்காத ஒரு உறவை தேடி கால்கள் ஓடுகிறது, கணகளும் தேடுகிறது, மனதை திருடிவிட்டால் -என்று கவிதை பாடுகிறது, அழகில் ஆரம்பித்து அழுகையில் முடியும் உறவு, நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்யும் உறவு, கண்டதும் காதல், பேசியதும் காதல், உண்மை காதல், மென்மை காதல், ஃபோன் காதல், போண்டா காதல், ஏன் இத்தனை காதல்? சாதிக்க நினைக்கும் இளைய சுடர்கள் சலித்து கொள்கிறார்கள் இக்கால காதலை கண்டு. புதர் இடையுலும்,இருள் தியேட்டர்களிலும், சுற்றுலா தடங்களிலும் காதல் எனும் பெயரில் காமம் தானே நடைபெருகிறது? முகத்தை சுளிக்க வைக்கும் இச்செயலின் பெயர் காதலா???? மற்ற தோல்விகள் மனதில் நிற்பதில்லையே-ஆனால் காதல் தோல்வி மனிதனை மாண்டு விடச்செய்கிறதே!
இதுவே காதலின் சக்தியோ? அறவே இல்லை அனைத்திற்கும் மனமே காரணம். காதல் என்பது அற்புத உணர்வு-அது கல்யாணத்திற்கு பிறகு,ஆனால் அது கள்ளக்காதலாக இருக்க கூடாது,.

எழுதியவர் : இராஜ்பி (23-Mar-14, 3:15 pm)
சேர்த்தது : இராஜ்பி
Tanglish : kaadhalai thedi
பார்வை : 62

மேலே