அவள் மட்டுமே அறிந்த ரகசியம்
பொய் மெய்யாகும்
மெய் பொய்யாகும்
கூண்டு விசாரணையில்
சாட்சியமற்ற வழக்கு...!
பொய்யங்கே சாட்சியானால்
பொய்யங்கே வென்று
மெய்யதை தூக்கிலிடும்
வாய்மையே வெல்லும் சுவரொட்டி!!!
பத்து தலை கூடிட
ஒத்தை பெண்ணின் கண்ணீர்
மெய் பொய்க்ககூடும்
வாழ்கையே சிறையாய் ஆக்கக்கூடும்!!
உதிரம் தந்தவள் பொய்யாய்
தந்தை இவனென உரைத்தால்
பொய்யும் மெய்யாகும்
தந்தையவன் இரத்தம்
சோதனை செய்தால்
மெய்யென நினைத்ததும் பொய்யாகும்
இயற்க்கை யாவும் அழிந்ததென்றால்
பொய் பொய் தான்
இயற்கை இன்றி மானுடம் இல்லை
மெய் மெய்த்தான்