என்னவோ ஆனேன்

எழுதுகோல்
பிடிக்காத
இந்த இரண்டு நாட்களில்
எழுதாமலே படித்தது,
அடங்க மறுக்கும்
கண்களுக்குள்
அடங்கித்தான் போயேன்
என்ற எனது அடங்காமை....

குழம்பிக் கிடப்பதும்
கிடந்தது குழம்புவதும்
எனக்கான கடல்...
அலைகள் புரட்டவில்லை
பாதங்களே....

வானம் தொலைத்தது
வானத்தை...
கிடைக்காமல்
இருப்பதில்தான் சுகம்
எனக்கும் கூட...

திசை மறப்பது
சிறகின் வலிமை
சிறகு சுமப்பது
காற்றின் கவிதை...

கூடடையாத பறவை
கண்டிப்பாக
கூடு கட்டும்.....

கவிஞனாக சென்று
கவிதையாக வந்தேன்....
எதுவாக சென்றிருந்தால்
எதுவாக வந்திருப்பேன்...?

இறகானேன்....
சிறகானேன்....
என்னவோ ஆனேன்.....

எழுதியவர் : கவிஜி (24-Mar-14, 10:59 am)
Tanglish : ennavo aanen
பார்வை : 448

மேலே