மலேசிய விமானம்

எங்கே இருக்கிறாய்..
இன்றோடு பல வாரங்களாகிவிட்டது..
நீ சுமந்தவர்களை இறக்கி விட்டாயோ இல்லையோ
நாங்கள் இன்னும் எங்கள் நினைவுகளில்
உன்னைச் சுமக்கிறோம்..!
உண்மை நிலவரம் தெரியாமல்,
அழுகவும் முடியாமல்,
பிறர் புன்னகைக்கு
பதில் புன்னகை செய்யவும் முடியாமல்
எங்களை நாங்களே தேற்றிக்கொள்ள
வழியின்றி தவிக்கிறோம்...
காலம் கடந்ததால்
எதையும் ஏற்றுக்கொள்ள
ஒருபுறம் தயாரானாலும்
மறுபுறம்
இன்னமும் ஒரு எதிர்பார்ப்பை
கண்களிலும் இதயத்திலும்
ஏந்திக்கொண்டு
தவமிருக்கிறோம்
மலேசிய இயந்திரப் பறவையே
நிச்சயம் நீ வருவாய் என..!