என் காதல் கதை பகுதி 16

மறுத்தால் மரணம் என்று
மனசுக்கு தெரிந்தாலும்
விரும்பியது மறக்காது
விளக்கமோ இருக்காது ....

முதல்காதல் தோற்காமல்
மனசிங்கே கிடையாது
மருந்தாக தொடங்கும்
இரண்டாம் நேசம் நிஜமாகும்

ஆறுதல் தேடி தான்
அலைபாயும் மனது
மீண்டும் ரணமேன்றால்
ஒரு தேடல் இருக்காது

காதல் கை சேர்ந்தால்
கடலளவு கடுகளவாம்
காதல் அது தோற்பின்
அந்த கடுகளவும் கடல் அலையாம் ....

மருந்தாக சிறக்கின்ற
மறுகாதல் எல்லாமே
சிறு சிறு பூசல் ஆனபோதும்
சிந்தனையால் விலகாதே ...........

இன்னும் தொடரும் என் காதல் கதை

எழுதியவர் : ருத்ரன் (24-Mar-14, 8:11 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 101

மேலே