இலட்சியன்
கவிதைகள் பாடும் கனவே,
நீ வா,வா எனது இரவில்-நினைத்த காரியம் கைகூட வேண்டும்- எனது கடமையும் முடிந்தாக வேண்டும். முடியும் என்பது எமது சொல், அது முடியாவிடின் அப்போதும் சொல்வேன் முடியும் என்று, நான் எழுதுவதை கேலியாக்கி என்னை போலியாக்க நினைத்தார்கள் அவர்களுக்கு தெரியாது எம் கவிதை வறுமை நோயை ஒழிக்க, போலியோ போல் மருந்தாகும் என்று. தூய தங்கத்தின் மறுபெயர் சொக்கம், வெற்றி ஒரு நாள் வந்தடையும் எம் பக்கம்,