நதியலையில் ஆடும் நிலவு

நிலாப்பெண்!

தன் குளிர்ச்சியால் நதியை
குளிர்விக்க வந்தவளோ?-இல்லை
நதியில் குளிக்க வந்தவளோ?

அல்லி மலர்களை தன் கூந்தலில் சூட
அவற்றை கொய்ய வந்தவளோ?-இல்லை
அவற்றை மலர்விக்க வந்தவளோ?

நதியென்னும் கண்ணாடியில் தன்னை
பார்க்க வந்தவளோ?-இல்லை
பார்த்து ரசிக்க வந்தவளோ?

நீச்சல் தெரியாமல் நதியில்
தத்தளித்து நிற்பவளோ?-இல்லை
காற்றலைகளால் கலங்கி நிற்பவளோ?

கதிரவன் தன்னை எப்படியும்
காப்பாற்ற வருவான் என்று காத்துக்கிடப்பவளோ?-இல்லை
கைப்பிடிக்க வருவான் என்று காத்துநிற்பவளோ?

எழுதியவர் : திலகா (25-Mar-14, 8:32 pm)
சேர்த்தது : திலகா
பார்வை : 90

மேலே