கல்லூரி வாசல்

கனவுகளின் தொழிற்கூடம் _சிலருக்கோ
காதலின் பிறப்பிடம்
தோழமை தோள்சாய்க்க
வருடங்கள் நிமிடமாய் கரைய

மெய்ஞானமும் விளங்காமல்
விஞ்ஞானமும் அறியாமல்
வீதிக்கு வந்தோம்
வெற்று காகிதமாம் -சான்றிதழுடன்

வேலை தேடி புறப்பட்டோம்
உலகை புரிய தலைப்பட்டோம்
கற்றது கடுகளவு என உணர்ந்தோம்
அனுபவமே ஆசான் என அறிந்தோம் _


கல்லுரி என்பது
ஒடுக்கமானதோர் சந்தில்
உடல் ஒடுங்க பயணித்த ஓர் அனுபவம்

ஊசிகண் வழியே உலகறிய
முனைந்த ஓர் மூடத்தனம். ........ஆதலால்


அறிவோம் அறிவை
உலகின் வழியே!

எழுதியவர் : (25-Mar-14, 8:51 pm)
Tanglish : kalluuri vaasal
பார்வை : 90

மேலே