நீ மட்டும் தான்
விழுவதில் அழகு
மழை நீர் மட்டும் தான்...!!!
அழிவதில் அழகு
அலைகள் மட்டும் தான் ...!!!
அழுவதில் அழகு
அருவி மட்டும் தான்...!!!
மலர்வதில் அழகு
பூக்கள் மட்டும் தான்...!!!
பார்பதற்கு அழகு
பெண்கள் மட்டும் தான்...!!!
அந்த பெண்களில் என்னை கவர்ந்தது
அன்பே நீ மட்டும் தான்,,,!!!
சிரிப்பதில் அழகு
சிலர் மட்டும் தான்...!!!
அந்த சிலரில் பிடித்தது
உன்னை மட்டும் தான்...!!!
வாழ்க்கையே பாதி
கனவு மட்டும் தான்...!!!
அந்த கனவில் வருவதும்
அன்பே நி மட்டும் தான்...!!!
என் இதயத்தில் இருப்பது
காதல் மட்டும் தான்...!!!
அந்த காதலுக்கு காரணமும்
நீ மட்டும் தான்...!!!
என் இதயம் துடிப்பது
உனக்கு மட்டும் தான்..!!!
இனி உன்னுடைய இதயமும்
எனக்கு மட்டும் தான்...!!!
எனக்கு ஆசை
ஒன்று மட்டும் தான்...!!!
அந்த ஒன்றும்
உயிரே நீ மட்டும் தான்...!!!
எனக்கு மரணம் ஒன்று வந்தால்
அது உன் மடியில் மட்டும் தான்...!!!