கடல் அலைகளா நினைவலைகளா

ஒருநாள் ...
அலையாய் வந்தாய் ...
அழகாய் என்னை தழுவி சென்றாய் !
எப்படி தேடுவேன் உன்னை ?
இந்த சமுத்திரத்தில் !
இன்றும் காத்துகொண்டிருக்கிறேன்
அதே கடற்கரையில் உனக்காக!
வருவது நீயா?
இல்லை உன் நினைவலைகளா ?
சிப்பிகளாய் சிதறி கிடக்கிறது
உன் ஞாபகங்கள் !
சேகரித்து வைக்கிறேன்
என் இதய கிடங்கில் !
அவை தோரனமாகபோகிறதா ?
இல்லை தொலைந்து போக போகிறதா ?
கேள்விகள் மட்டுமே எனக்கு சொந்தம் ...
அதனால் தான் என்னவோ
எனக்கு...
விடைகொடுத்தாயோ ??
இவன்,
நிலவின் நண்பன் !