அப்படி போடு இப்படி போடு
அப்படி போடு இப்படி போடு
அப்படி போடு இப்படி போடு கண்ணா ...................
புல்லாங்குழல் வீசிவிட்டு
புரியாமல் பிடிக்கச்சொல்லி
கார்மேகம் கவர்ச்சி எரி மூட்டி
களையும் தேகம் நெய்யில் ஊற்றி
வருண கண்ணீர் வயிற்றை நனைக்க
வந்தான் கண்ணன் கோவர்த்தனனாய்
காப்பீடு வாழ்வில் உண்டா
கண்ணன் கீதை புதுசாய் எடுக்க
இருசக்கர தேரை ஓட்டும்
இப்போதைக்கு நீ சாரதியே
அம்பு முதுகை விரட்டி வரும்
அதனை எறியும் எரிபொருள் வில்லோ
அவளை தாங்கும் நெஞ்சம் தவிர்த்து
அடிபட வைத்தது புறபுண் கனவாய்
" விளம்பரங்கள் வெற்றியை கொடுக்கலாம்
விதிமட்டும்தான் முடிவினை கொடுக்கும் "
கண்ணன் போனான் அமிதாபச்சனோடு *
காப்பீடு எடுத்துகொள் குடும்பம் உருப்படும்