காதல் பித்து தொலைக்கும் முத்து
ஏண்டா மடையா
இடையாற்பட்டியில் பிறந்தாயோ !
இதுவரை வடையா நீயும் சுட்டிரோ!
வாலிப முறுக்கு உன்
வயதினில் இருக்கு !!
வயோதிகன் போல்
வார்த்தைகள் எதற்கு?
சாதிக்க துடிக்கும் வயசினிலே
பேதையை நினைத்தாயோ !
பின் தொடர அவள் மறுக்க
போதையில் விழுந்தாயோ!!
பெற்றவர் நிலையை நீ மறந்து
புத்தியும் குலைந்தாயோ!!?
வறுமையில் நீயும் வாழ்ந்தாலும்
திறமையிருந்தால் சாதனை புரியலாம்!
சோதனையில்லா வாழ்வில்
சாதனை வந்தால் வேதனையாகும்!!
கட்டில் சுகத்தை எண்ணி நீயும்
கட்டிய கோபுரம் உடைக்காதே!!
பொட்டில் அறைந்தது போல்
பட்டென பெற்றோரிடம் உரைக்காதே!!
மண்சட்டியடா உன்னை பெற்றவர் !!
உன் உதைக்கு உடைந்து விட்டால்
உருகொடுக்க முடியாது !!?