பயணத் துளிகள்

ஆறு கை
நாலு கால் வீரன்
உயர்மின் கம்பிதாங்கி..!!
***
அன்றுமட்டும்
அந்த வீதி
சுத்தமாய் இருந்தது
மந்திரி வருகை..!!
***
எதிர்மறை
ஓட்டம் கொண்ட
வறண்ட ஆறு
நெடுஞ்சாலை..!!
***
வருவோர் போவோர்க்கு
டாடா காமிகின்றன
பச்சை மர இலைகள்..!!
***
என்னோடு
பயணிக்க மறுக்கின்றது
எதிர் காற்று..!!
***
குடைக்குள்
வெளிச்சம்
தெருவிளக்கு..!!
***
பொறுமை
இல்லாத எருமை
கத்துகின்றது பின்னே..!!
***
நமக்கு நாமே
வடிவமைக்கும் பயணம்
வாழ்க்கை..!!